Translate

Thursday, 6 November 2014

புதுக்குறள்

சரக்கு விலையேறியும் சண்டையிடாமல்     சரக்கடிப்பார்

மற்றவர் சாராயம் குடித்து சாவார்

பேஸ்புக் மொக்கை


மொக்கை வணக்கம்


பல்பு


பேஸ்புக் அலப்பறைகள் 19


பேஸ்புக் அலப்பறைகள் 18


பேஸ்புக் அலப்பறைகள் 17


பேஸ்புக் அலப்பறைகள் 16

காகம் கரையும்ன்னு சொல்றாங்க ஆனா எந்த காகமும் கரைஞ்சத நான் பார்த்ததே இல்லை யாராவது பாத்திருக்கீங்களா

கடை சாத்தப்படுகிறது

நண்பர்களின் அன்பு கட்டளையால் 10 நிமிடத்தில் மீண்டும் திறக்கப்படும்

இனிய இரவாகட்டும் டும் டும் டும்

பேஸ்புக் அலப்பறைகள் 15

பெண்களுக்கான பதிவு:

யார் இன்பாக்சுக்குலாம் வரலாம் நான். இன்பாக்ஸ்க்கு வரலாம்ன்னா என் உள் டப்பிக்கு ஒரு மெசேஜ் போட்டு விடுங்க. 

இந்த ஸ்டேட்டஸ் பாத்துட்டு இன்பாக்ஸ் வர்ற பசங்க மொபைல் வெடிச்சிரும் 
பல்பு வாங்குறது கொஞ்சம் குறையும்ல

பேஸ்புக் அலப்பறைகள் 14

பொண்ணுங்க பேர பாத்தாலே மெசேஜ் அனுப்ப கை டக்கு டக்குன்னு போவுது 

ஸ்க்ரீன் ஷாட்ட நெனச்சாலே மனசு பக்கு பக்குன்னு ஆவுது

படிப்பு நம்மை சீர்திருத்தி விட்டதா???

படித்தவன் ஒரு கையெழுத்து வாங்க 100 குடுத்து வாங்கிட்றான்
படிக்காதவன் காசு கொடுக்காமல் பல மணி நேரம் காத்திருந்து வாங்குகிறான்
படித்தவன் சட்டத்தின் ஓட்டையை தெரிந்து கொண்டு தவறு செய்கிறான்
படிக்காதவன் தவறு செய்யவே யோசிக்கிறான்
படித்தவன் சிறைக்கு கூட சிரித்து டாட்டா காட்டி கொண்டே செல்கிறான் 
படிக்காதவன் காவல் நிலையம் செல்வதையே கேவலமாக எண்ணுகிறான்
படித்தவன்(ள்) அங்கங்கள் தெரிய கட்டிக்கொள்கிறார்கள்
படிக்காதவர்கள் ஆடையில் கட்டுப்பாடாகவே இருக்கிறார்கள்
பக்கத்தில் வீட்டில் எதும் உதவி என்றால் படிக்காதவன் ஓடி வருகிறான் படித்தவன் வேணிக்கை பார்க்கிறான்
உணவளிக்கும் பாட்டாளி விவசாயிக்கு படித்தவர்கள் கொடுத்த பட்டம் காட்டுமிராண்டி, பட்டிக்காட்டான், மாடு மேய்ப்பவன்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அனைவரும் படித்தவர்களே, ஆட்சிக்கட்டிலில் இருந்து திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் புரியும் அனைவரும் படித்தவர்களே
படிப்பு மனிதனை சீர்திருத்தி விட்டதா இல்லை சீர்குலைத்து விட்டதா
இங்கு படிப்பில் மாற்றம் தேவையில்லை ஆள்வதற்கு ஒரு ஹிட்லர் தேவை

பேனா முனையில் சீர்திருத்தம் அடைய நம்மக்கள் தயாரில்லை 
உயிர் பயம் காட்டும் துப்பாக்கி முனையில் தான் சீர்திருத்தம் அடைவார்கள்

கத்தி கம்யூனிசம்

வயிறு நெறஞ்ச பிறகு சாப்பிட்ற இட்லி மத்தவங்களோடது

50 கோடி முதலீட்டு படத்துக்கு 100 கோடி வசூல் அப்படின்னா இது யாரோட பணம் ஒரே கன்பீசனா இருக்கே

கம்யூனிச கத்தி

விஜய் ரசிகர்களுக்கு

அளவுக்கதிகமான கடன் கூட மத்தவங்க கடன் தான் 

எனக்கு 20 இலட்சம் கடன் இருக்கு 5 லட்சம் வரை என்னோடது மீதி 15 இலட்சம் உங்க கடன் தான் வரிசையா வந்து 15 இலட்சம் கடனை அடச்சிட்டு போங்கய்யா

சண்டை போடாம வரிசையா வாங்க
😬😬😬😬😬😬😬😬

பேரூந்து பயண டெம்பரரி காதல்:


உன் சிகையலங்காரத்தில் சிக்கி தவிக்கும் சிட்டுக்குருவியாய் நான்

திக்கு தெரியாமல் தவிக்கிறேன் திரும்பி பார் என் திடீர் காதலியே 

ஒரு முறை புன்னகைத்து விடு பெண்ணே ஒரு மணி நேர பயணம் ஒற்றை நொடியாய் கரைந்திடுமே

விடுதலை புலிகள் பற்றி விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை. ஏப்ரல் 25, 2009 ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழுக்கு மகுடம்

திருக்குறளை ஜப்பானில் ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக வைத்துள்ளனர்.
பாரதியார், வள்ளலார் ஆகியோரின் நூல்களையும் சூஜோ என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
இவருக்கு இங்கிருந்து உதவிய ஓமலூர் முத்து என்பவருக்கு ஜப்பானிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. 
எங்கெங்கு காணினும் எம் தமிழடா
இதை காணும் போதே என்மனம் பூரிக்குதடா 

காலை வணக்கம்

உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது அது போல தான் அதிகமா லைக் வாங்குறவங்க எல்லாரும் அறிவாளி இல்லை என்று தீர்ப்பு கூறி காலை வணக்கம் வச்சிக்கிறேன்

Wednesday, 24 September 2014

காலை வணக்கம்


பேஸ்புக் அலப்பறைகள் - 13

பெயர் சொல்ல விரும்பல feeling திட்டாதீங்கப்பா

காலையிலே தத்துவம் போடாம 
வணக்கம் சொன்னா 
ஏத்துப்பாங்களான்னு தெரியலையே 
எதுக்கும் சொல்லி வைப்போம் 

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
           காலை வணக்கம்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன்

லெ(க்கி)ன்ஸ்

கேழ்வரகு கூழ்

எதோ எங்களால முடிஞ்ச வரை 
கேழ்வரகு கூழ் செஞ்சோம். 

நாலு நாள் முன்ன KFC ல போயி சாப்பிட்டத விட 100 மடங்கு சுவை 

திருப்தியாய் சாப்பிட்டோம்

பேரீச்சங்காய் (கனி)

பேரீச்சை காயிலிருந்து கனியாகும் பருவம்.

இப்ப தான் வாங்கிட்டு வந்தோம். 

யாரெல்லாம் சாப்பிட வர்றீங்க


தினம் ஒரு திருக்குறள்


கலியுக புத்தர் கணேசன் ராமசாமி


சினிமாக்காரர்கள் மட்டும் தான் மனிதர்களா???

ஒரு வேளை சோற்றுக்காக 14 வயதுக்கு கீழ் வேலைக்கு செல்ல முடியாது , ஆனால் சினிமாவில் நடிப்பவர்களுக்கு தடை இல்லை 
18 வயதிற்கு கீழ் திருமணம், பாலியல் வலைதளங்கள் தடை
ஆனால் காதல் ரசம் சொட்ட சொட்ட நடிக்கலாம். உதட்டு முத்த காட்சியிலும் நடிக்கலாம்.
பள்ளிக்கு 10 நாள் செல்லாவிட்டாலும் பிரச்சனை
ஆனால் சினிமாவில் நடிக்க மாதக்கணக்கில் விடுமுறை கொடுப்பார்கள் 

ஏன் சினிமாக்காரர்களுக்கு மட்டும் இத்தனை சலுகை. 
ஆள்பவர்களை திரையில் தேடுவதாலா??????

Monday, 22 September 2014

முக(மூடி) நூல்

முகமும் இல்லை முகவரியும் இல்லை ஆனால் பெயரோ முகநூல்!!!

இங்கு முகங்களை விட முகமூடிகளே ஏராளம் 

யோவ் மார்க்கு பேரை மாத்தி "முகமூடிநூல்" ன்னு வச்சிருப்பா!!!

குட் ராத்திரி கும்புடு வச்சிக்கிறேன்ங்க

பேஸ்புக் அலப்பறைகள் 12

பொண்ணுங்களோட இன்பாக்ஸ் போனா எல்லாரும் திட்டுறாங்க

அதெப்பிடி அவங்க எல்லாருக்கும் ஒரே டிசைனா இருக்கு

ஒரே கொயப்பமா இருக்கே

"ரம்"மியமான் மாலை வணக்கம்

பாசமா இல்லை வேசமே

பல கோடி ஆண்களின் விரல்கள் காத்திருக்கின்றது!!!

பெண்களின் கண்ணில் இருந்து கண்ணீர் வருமா!!!

துடைத்து விடுவோம் என்று

நடுவுல கொஞ்சம் வம்பு

நாட்டாமை வச்சிருக்கரது சொம்பு 

நயன்தாராவ வச்சிருந்தது சிம்பு

அடி வாங்க வேணும் தெம்பு

நமக்கெதுக்கு ஊர் வம்பு

டொக்.... டொக்...,

டேபிள் மேட் வாங்குறவங்க வீட்டு டிவியில டேபிள் மேட் விளம்பரம் வராதுன்னு சொன்னாங்கன்னா தமிழ் நாட்டுல எல்லா வீட்டுலயும் வாங்கிருவாங்க.
முடியல சாவடிக்கிராங்க

டொக் டொக்

நன்றி முகனூலே:


தமிழில் படித்தால் கேவலம் 
தமிழில் பேசினால் கேவலம்
தமிழில் பேசலாமே என்றால் ஆங்கிலம் தெரியாத என கிண்டல்
தமிழ் படிச்சா சட்டி கழுவுற வேலை கூட கிடைக்காது என்று எங்கும் தமிழுக்கு எதிராவே இருந்த நம் மக்களை, 
தமிழ் பயன்படுத்தினால் தான் பெருமை என்று உணர வைத்த ஒரே இடம் முகநூல், மூஞ்சி புக், முகப்புத்தகம், ஃபேஸ்புக் மட்டுமே

என்னவளே

அன்பே,

சில்லென பெய்யும் சிறு தூறலும்,

சிலிர்க்க வைக்கும் தென்றலும்
உஷ்ணமாகி போனதே 

நீ இல்லாததால்.

தத்துவத்துக்கே தத்துவம்

தத்துவம் போட்டு காலை வணக்கம் சொல்றவங்களே 

அந்த தத்துவத்தை கடைபிடிச்சிருந்தா இந்தியா எப்பவோ வல்லரசா ஆயிருக்கும். 

காப்பியடிச்ச கவிதை

நம் ஸ்பரிசத்துக்குள் இடைவெளி வேண்டும்,

விரல்களுக்கிடையில் வேண்டாமென்று பிணைத்து கொண்டாய் போல,

பெண்ணே எச்சரிக்கையாயிரு,

என்னுள்ளிருக்கும் காதல் ராட்சசன் 
நடந்து செல்லும் பாலமே

உன் விரலிடை தான்

எச்சி இலை பொறுக்குற நாய்க்கு ஆசைய பாரேன்

என்னை நிதியமைச்சர் ஆக்கினால் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்பேன் - சுப்பிரமணியசாமி 

ஏன் இந்த ஆள விஜயகாந்த் பட ஸ்டைல்ல விசாரிச்சி மீட்கலாமே

அடிமை

மனசு கஷ்டமா இருந்தா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்ன்னு போற இடம் 

டாஸ்மாக்கும்

ஃபேஸ்புக்கும்
  
இப்ப இந்த ரெண்டுக்கும் அடிமையாயிட்டாங்க.

பேஸ்புக் அலப்பறைகள் - 11

வெளிநாட்டுல கஷ்டப்பட்டு உழைக்கிற புள்ள வீட்டுக்கு போன் பண்றேன், 

தங்கம் எப்பிடிடா இருக்க சாப்பிட்டியாமா என்ன சாப்பிட்டன்னு கேக்காம என்னடா எந்த நேரமும் மூஞ்சி புக்குல என்னடா பண்றன்னு கேக்குறாங்க.

யோவ் மார்க்கு நான் உனக்காக ராத்திரியும் பகலும் சம்பளம் வாங்காம வேலை பாக்குறேன் எங்க வீட்டுல போட்டு குடுக்குறியா. 

கடைசி வார்னிங் இனி அந்த மாதிரி பண்ணுன அப்புறம் நான் ப்ளாக்கருக்கு போயிருவேன் பீ கேர்ஃபுல்

காலங்காத்தால தத்துவம்

விதைத்தவன் விடியும் வரை உறங்கலாம்
ஆனால்
விதைகள் உறங்குவதில்லை விருட்சமாகும் வரை 
விழித்தெழு நண்பா விதைப்பதற்கு
விதைகள் காத்திருக்கின்றது 
காலை வணக்கம்

சமந்தா பஞ்ச்

என்னை யாரும் லவ் பண்ணல

நானும் யாரையும் லவ் பண்ணல.

இது சமந்தா சொன்னது.


நான் சொல்ல முடியாது ஏன்னா என்னை பல பொண்ணுங்க லவ் பண்றாங்க. 

அவார்டு கிடைக்குமா இந்த சிந்தனைக்கு


பேச்சிலர்ஸ் பில்டப்

மீன் குழம்பு வச்சி குடுத்துட்டு 
எதோ மீரா ஜாஸ்மின்னையே 
வீட்டுக்குள்ள கூப்பிட்டு வந்து விட்ட 
மாதிரி பில்டப் குடுக்குறாங்க. 

நானும்தான் திமிங்கலம் குழம்பு 
நல்லா வைப்பேன் வேணும்னா 4 
திமிங்கலம் வாங்கி குடுத்து பாருங்க. 

ம்ம்ம் கோவத்துடன் ராத்திரி வணக்கம்

நெட்டுல பிட்டு

நெட்டுல புது படத்த அப்லோடு பண்ணும் நண்பர்களே!!

கொஞ்சம் நல்ல பிரிண்ட் போடுங்கய்யா. 

இருட்டுக்குள்ளையே படம் பாக்கிற மாதிரி இருக்கு. 

நீ???? நான்????

அன்பே

என் உயிர் தாங்கி நிற்கும் உன் தேகத்தை 

நீ என்பதா!! 

இல்லை நான் என்பதா!!

பொறுப்பில்லா பெற்றோர்

இப்பல்லாம் பெரியவங்களுக்கு பொறுப்பே இல்லப்பா.

நம்ம பையனுக்கு வயசாவுதே 4,5 பொண்ண பாத்து கல்யாணத்த பண்ணி வைப்போம்ன்னு தெரிய மாட்டேங்குது. 

26 வயசு வரைக்கும் பேச்சிலராவே இருக்கிறது எம்புட்டு கஷ்டமா இருக்கு. 

சொந்தக்காரன் எவனாவது இத பாத்தாவது வீட்டுல போட்டு குடுக்குறானான்னு பாப்போம்

பேஸ்புக் அலப்பறைகள - 10

லவ் பண்ணலாம்ன்னு ஒரு பொண்ணு கிட்ட ப்ரொப்போஸ் பண்ணினேன். 

உங்க ஃபேஸ்புக் ஐடி குடுங்கன்னு கேட்டாங்க சொன்னேன். 

அரை மணி நேரம் கழிச்சி வந்து சாரி முடியாதுன்னுட்டாங்க. 

ஏன்னு கேட்டேன் நீங்க ரொம்ப நல்ல புள்ளயா இருக்கீங்கன்னு சொல்லி டாட்டா காட்டிட்டு போயிட்டாங்க. 

நல்லவனா இருக்கிறது தப்பா. பீலிங் ஜோ சேட்

பேஸ்புக் அலப்பறைகள் - 9

(வெக்கப்பட்டுக்கிட்டே படிக்கவும்):

இன்னைக்கு ஒரு பிரபலம் எனக்கு போன் பண்ணினாங்க. 

அவங்க தம்பி உன் ஸ்டேட்டஸ் எல்லாம் சூப்பரா இருக்கு, ரொம்ப நல்ல பேசுற, 

உன் வாய்ஸ் ரொம்ப இனிமையா இருக்கு, நீ ரொம்ப நல்ல பையனா இருக்கன்னு என்னைய ரொம்ப புகழ்ந்துட்டாங்க. 

சந்தோசமா இருக்கு. 

பிரபலம் என்னும் பகட்டே இல்லாம பேசினாங்க

காதலி வெட்கம்

அன்பே,

உன் தேகம் பார்க்கையில் எந்தன் விழிதனில் மோகமில்லை,

ஆனால் எனை கண்டதும்,

உன் விழிகள் காட்டும் வெட்கம் 
என் காதலை கரைத்து காமதேவனாக்கி விடுகிறதே.

முதிர் காளைகள்

"இன்னுமா கோலம் போட்டுக்கிட்டே இருக்க"

ரேஞ்சுல என்னையும் சேத்திருவாங்க போல.

சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்கய்யா. 
முதிர் கன்னிகள் மட்டுமல்ல

"முதிர் காளைகளும்" இருக்கின்றோம்

அஞ்சான் பஞ்ச் ஒண்ணு தந்தான்


ஒருத்தர் குட் நைட் போட்டா பயந்து ஓடி போயி குட் நைட் போட நான் ஒன்னும் *குருவி* இல்லடா


நின்னு நிதானமா குட் நைட் போட்டுட்டு இங்கயே சுத்துற *சுறா* டா நான்.

கணேசன் ராமசாமி  feeling அச்சச்சோ 2 படமும் ப்ளாப் ஆச்சே. பரவாயில்ல போ போ போ

தமிழ் வளர்த்த மார்க்கு

தமிழை வளர்த்தவங்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டுமெனில் 

இப்போதைக்கு முதல்ல ஃபேஸ்புக்கு ஓணர் மார்க்குக்கு தான் நடத்தணும். 

என்ன மக்களே சரி தானே

பேச்சிலர்ஸ் கதறல்

நம்ம துணியை நாமளே துவைக்கிறதும்

நமக்கு நாமே சமைக்கிறதும் 

பெரிய கொடுமைடா சாமி. 

நியாயமாரே கொஞ்சம் கருணை காட்டி ஒரே ஒரு கல்யாணம் பண்ணி வையுங்க நியாயமாரே

எப்படியோ நாம சமைக்கிறத இந்த உலகத்துக்கு சொல்லியாச்சி 

மத்தியான சொந்த சமையல் வணக்கமுங்க

பேஸ்புக் அலப்பறைகள் - 8

கணேசன் ராமசாமி 🚉travelling to காசி. சந்நியாசி ஆக போறேன்

ஆசை நாளாக நாளாக ஏக்கமாகிறது

கல்யாணமே நடக்காது போல 

ஏக்கத்துடன் தூக்கத்துடனும் 
இரவு வணக்கம்.

கலியுக புத்தர் கணேசன் ராமசாமி


பேஸ்புக் அலப்பறைகள் 7

எதாவது ஸ்டேட்டஸ் போட்டு வணக்கம் சொல்லுவேன். 

இப்போ எந்த ஸ்டேட்டசும் இந்த மர மண்டைக்கு வரல

அதனால மாலை வணக்கம் சொல்லல நட்புக்களே


பேஸ்புக் அலப்பறைகள் - 6

சைக்கிள் வாங்க கூட முடியாதப்போ பைக் வாங்க ஆசைப்பட்டேன்... 

பைக் வாங்கிட்டேன்.. 

கார் கூட இப்போ வாங்க முடியாது 

ஆனா 

ஏரோ ப்ளேன் வாங்க ஆசைப்படுறேன். 

அப்போ இன்னும் 2 வருசத்துல ப்ளைட் வாங்கிருவேன். 

என் ப்ளைட்ல வர விரும்புறவங்க கமெண்ட்ல சொல்லுங்க

முறை பொண்ணு

என் மாமா பொண்ணு பேசிட்டுருக்கும் போது "அத்தான் அத்தான்" நீங்க ஊருக்கு வரும் போது எனக்கு ஒரு கேமரா வாங்கிட்டு வாங்க ன்னு சொன்னிச்சி. 

நான் உடனே 

"உன் அழகிய விழிகள் போதுமே என்னை படமெடுக்க பின் எதற்கடி புகைப்பட கருவி" 

ன்னு சொன்னேன். 
போன் கட் பண்ணிட்டு சுவிட்ச் ஆப் பண்ணிருச்சு. 
இதுல என்னய்யா தப்பு இருக்கு

என்னவள்

என்னவளே!!

காதலை சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் மௌனமாய் சிரித்து சென்றாயே !! 

பதில் மொழி சொல்லாது என்னை பரவசப்படுத்தி சென்றாயே!!!!

ப்ளாக்கருக்கு வந்த காரணம்

என்னுடைய முகநூல் கணக்கில் 


பாம் வைத்துவிட்டதால் கடை காலவரையின்றி சாத்தப்படுகிறது. 

2011 ல போட்ட ஸ டேட்டசுக்கெல்லாம் லைக் கமெண்ட் போடுறீங்களே. 

நான் என்னய்யா பாவம் பண்ணினேன்

நான் ப்ளாக்கர் க்கு போறேன்

கணே sh ருதி

ஷ்ருதி ன்னு ஒரு பொண்ணு ப்ரண்ட் ரிக்வெஸ்ட் குடுத்துச்சி. 

ஓகே ஒரு கவிதை சொல்லி இம்ப்ரஸ் பண்ணலாம் ன்னு நெனச்சி 

கவிதைய ஒரு பிக்சர்ல ரெடி பண்ணி அனுப்புனேன் 

பயபுள்ள ப்ளாக் பண்ணிருச்சி என்னய. தப்பு பண்ணிட்டேன் 

தீவிரவாதிகள்

ஆயுதம் எடுத்தவங்க எல்லாம் தீவிரவாதின்னா 
கல்யாணமான எல்லா பொண்ணும் தீவிரவாதி தான். 

இப்ப தான் ஒருத்தர் அழுதுட்டு போறார்.

பிரிந்த நட்பும் பிரியாத எண்ணும்

தொடர்பு கொள்ள முடியாத 

ஆனாலும் 

அழிக்க மனமில்லாத எண்கள் 

எல்லா கைப்பேசியிலும் உண்டு 

பசுமையான நினைவுகளுடன். 

சரித்திரமும் சாம்பாரும்

தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் ஷாஹஜி காலத்துல வாழ்ந்த ஒரு புலவரால எழுதப்பட்ட நூல் 

100 ஸ்லோகங்களைக் கொண்டதாம்...

வேற எங்கயுமே அந்த மாதிரி நூல் இல்லையாம்.....

"இடமிருந்து வலமாக படிச்சா இராமயணமாம்"

"வலமிருந்து இடமா படிச்சா பாகவதமாம்"

எவ்வளவு ஆச்சரியமான விஷயம்ல....
கேள்விப்பட்டிருக்கீங்களா?

கொசுறு: சாம்பாரை நமக்கு அறிமுகப்படுத்தியதும் ஷாஹஜி தான்.. 

Law law லா லா

ஓவரா பேசுறவனுக்கு "law"படிச்ச பொண்ணு அமையும் 

இல்லன்னா பெயர்ல "la"ன்னு முடியிற பொண்ணு தான் அமையும். 

என்ன திட்டு அம்மாடியோவ்.

வாய் கிழிய பேசுவான் ஆனா அங்க வாயே தொறக்கலையே. 

யாருக்கோ. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 

காதலி இல்லையேல் கவலையும் இல்லை


எந்த பொண்ணும் லவ் பண்ணலையேன்னு வருத்தப்படாதிங்க. 
அது நீங்க போன ஜென்மத்துல பண்ணின புண்ணியமா இருக்கும்.

என்னைய 8 பொண்ணுங்க லவ் பண்றாங்க எம்புட்டு கஷ்டமா இருக்கு தெரியுமா மெயிண்டெயின் பண்றதுக்கு. 

டைம் டேபிள் போட்டு எம்புட்டு நாள் தான் காலம் தள்ளுரது

ஆப்பு

அரேஞ் மேரேஜ் பண்ணி அவஸ்தைப்படுறத விட,

காதலிச்சி கல்யாணம் பண்ணி கஷ்டப்பட்டுடலாம். 

எந்த கல்யாணமா இருந்தாலும் ஆப்பு உண்டு தானே.

பேஸ்புக் அலப்பறைகள் - 5

ஸ்கூட்டருக்கே ஸ்டெப்பினி இருக்கும் போது

ஃபேஸ்புக் ஐடிக்கு ஒரு ஸ்டெப்பினி இருக்க கூடாதா???

என்னோட இன்னொரு ஐடி 
பெயர் சொல்ல விரும்பல 

விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

மார்க்கு இப்ப என்னய்யா பண்ணுவ

பறவைகள் சுதந்திரம்

பறவைகளை வாங்கி கூண்டிலடைத்து குதூகலப்படும் நண்பர்களே,

ஒரு மரத்தை வளருங்கள் பறவைகள் தானாகவே கூடு கட்டி சந்தோசமாக வாழும் 

பேஸ்புக் அலப்பறைகள் - 2

ஸ்டேட்டச பார்த்து லைக் போடுங்க
ஸ்டேட்டச பார்த்து லைக் போடாதீங்க 

சுய ஜிந்தனை

எழுதப்பட்ட காகிதமாய் இருக்காதீர்கள்

வரையப்பட்ட ஓவியமாய் இருங்கள் புன்னகையோடு 

மழை பெற

மரங்களை வெட்டுங்கள் தவறில்லை 

வெட்டும் மரங்கள் சீமை கருவேல முள் மரங்களாக இருக்கட்டும்

மாலை மயக்கத்தின் வணக்கம்

பெயர் சொல்ல விரும்பல

தத்துவம் கேளுங்க இல்லன்னா கத்துவோம்

உலோகங்கள் தன்னை தானே சுத்தப்படுத்தி கொள்ளும்

நாம் தான் நம் எண்ணங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் 

ஃபேஸ்புக் அலப்பறைகள்- 4


நமக்கு சந்தோசம் கிடைக்குதுன்னா 4 என்ன 40 ஃபேக் ஐடி கிட்ட கூட கடலை போடலாம்

என்னும் அரிய தத்துவத்தோடு 

சாயங்கால கும்புடு போட்டுக்குறேன் 

எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்க ரெடி

பெயர் சொல்ல விரும்பல

காதல் தேடல்

காதலிக்காதிங்க பொண்ணுங்க ஏமாத்திருவாங்க ன்னு எல்லா பசங்களும் சொல்றாங்க 

ஆனா எல்லாரும் காதலி தேடிக்கிட்டு தான் இருக்காங்க. 

இது என்ன டபுள் டமாக்கா ஆஃபர் டிசைனா????  பெயர் சொல்ல விரும்பல

சாம கும்பிடுங்கோ

காதல்

அன்று
அவள் சிரித்தாள் "வைரம்" என்றேன்
இன்று
அவள் பிரிந்தாள் வை "ரம்" என்றேன் டாஸ்மாக்கில் 

ச்சே பஞ்ச் செட் ஆகலையோ 

பரவாயில்ல மதிய வணக்கத்த வச்சிருவோம் 

குப்பை தொட்டி


சுற்றுப்புறத்தை சுத்தமாக்கி விட்டு தன்னையே குப்பையாக்கி கொண்ட தியாகி.

ஸ்டேட்டஸ் தோணலைன்னா இப்பிடி தான் மரண மொக்கை போடுவோம் 

பெயர் சொல்ல விரும்பல

அந்தி மாலை வணக்கம்

பேஸ்புக் அலப்பறைகள் - 3

ஆட்சியை பிடித்து விடலாம் என எதிர்க்கட்சிகள் நினைப்பது 
மன"பிராந்தி"
எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம்
🍷பே"ரம்"🍷பேசவில்லை.
🍹voteகா"க 🍹பணம் கொடுக்கவில்லை.
ஆதரிப்"பீர்"  பறக்கும் குதிரையின்
🍼சிறகு"கள்" 🍼

இந்திய  குடிமக்களுக்கு 
இரவு வணக்கம் 
பெயர் சொல்ல விரும்பல

Sunday, 21 September 2014

குப்பை மெசேஜ்

குப்பை தொட்டி;
சுற்றுப்புறத்தை சுத்தமாக்கி விட்டு தன்னையே குப்பையாக்கி கொண்ட தியாகி.

ஸ்டேட்டஸ் தோணலைன்னா இப்பிடி தான் மரண மொக்கை போடுவோம் 

பெயர் சொல்ல விரும்பல

அந்தி மாலை வணக்கம்

காலை வணக்கம்


Sunday, 17 August 2014

ஃபேஸ்புக் அலப்பறைகள் - 1

சகோதரா மூஞ்சிபுக்குன்னா என்னான்னு கேட்டியே:
ஸ்டேட்டஸ் போடணும், அடுத்தவங்க ஸ்டேட்டஸ்ல லைக் போடணும், நம்ம ஸ்டேட்டஸ்ல கேக்குற கேள்விக்கு அசிங்கப்படாம ஆன்ஸர் பண்ணனும், பஞ்சாயத்துக்கு போகணும், ப்ரண்ட் ரிக்வெஸ்ட் வந்தா அக்சப்ட் பண்ணனும் பொண்ணா இருந்தா உடனே இன்பாக்ஸ் போயி நன்றி சொல்லணும். ஃபேக் ஐடி கூட கடலை போடணும், அவன் ஸ்க்ரீன் ஷாட் போடாம இருக்கணும். சொந்தக்காரனை ஒரு பக்கம் பார்க்கணும் கவிதை புக்கு, ஜோக்கு புக்குல இருந்து காப்பி அடிக்கணும், படமே பார்க்காம விமர்சனம் எழுதணும், நாளைய, நாளை மறுநாள், மூணு மாசத்துக்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் பத்தி எழுதணும், அரசியல் தெரியனும், வரலாறு தெரிஞ்ச மாதிரி நடிக்கணும். பட்டி டிங்கலிங் பண்ணி போட்டா எடுத்து அத மறுபடியும் பட்டி டிங்கரிங் பண்ணி போடணும் , அத பாத்து 7 தலமுறையையும் கழுவி ஊத்துவாங்க. பொண்ணான்னு கண்டுபிடிச்சி அதுகிட்ட நான் தான் திருநெல்வேலிக்கே ஜமீன் ன்னு நம்புற அளவுக்கு புருடா விட்டு போன் நம்பர் வாங்குறதுக்குள்ள ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா.... இதெல்லாம் இல்லாம ஸ்டேட்டஸ்க்கு லைக்கே போடாம வாட்ஸ் அப்ல வந்து திட்றவனும் இருக்கான், இன்னும் இருக்கு ப்ரோ, கேட்ட உனக்கே மூச்சி வாங்குதே ஒரு சோடா சொல்லுப்பா

Friday, 15 August 2014

காலை வணக்கம்

எல்லாரும் என்னை விட்டு போனார்கள் 
எல்லாமும் என்னை விட்டு போனது 
விஞ்சியிருப்பது என்னவோ நானும் என் நம்பிக்கையும் தான் 

நம்பிக்கையுடன் காலை வணக்கம்.

Thursday, 14 August 2014

டவுட்டு

இந்தியா என்னும் நாட்டில் தான் இருக்கின்றோம். ஆனா இன்னைக்கு இந்தியர் இந்தியர் என்று சொல்பவர்கள் அனைவரும் 70 வருடத்திற்கு முன் பிறந்திருந்தால் நாங்கள் இங்கிலாந்துகாரர்கள் என்று கூப்பாடு போட்டிருப்பார்களோ டவுட்டு. புதுக்கோட்டை மக்களே நீங்கள் நெஞ்சை நிமிர்த்து சொல்லலாம். இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்கள் என்று. 

கலை வணக்கம்

நாம் அடைய துடிக்கும் லட்சியத்தில் அலட்சியம் இல்லாதவரை அதிர்ஷ்டத்தை தேட வேண்டியதில்லை காலை வணக்கம்